மறந்துவிட்டாயடி

நீ...
எனைப் பார்த்து
சிரித்த இடம்...

பழகித் தொலைத்த
நினைவு...

தூரலோடு
சிறுநடை போட்டதும்

இன்று...
தூண்டில் மீனாய்
துவசம் செய்யுதடி

மறந்துவிடு என்று
எளிதாக சொல்லிவிட்டாய்....

என்னால்
மறக்க முடியவில்லை
மறைக்கத்தான் முடிந்தது...

உனக்காக...
இன்று
என்னை நானே
இழந்துகொண்டிருக்கிறேனடி...!

எழுதியவர் : முப்படை முருகன் (26-Aug-18, 3:27 pm)
சேர்த்தது : முப்படை முருகன்
பார்வை : 108

மேலே