என்னவன்
தாயாய் வந்த உறவும் அவன்
தனிமையில் என்னை வருடும் தென்றல் அவன்
தகப்பனாய் என்னை தண்டிப்பவன்
தள்ளி நின்று என்னை ரசிப்பவன் அவன்
என்னை கட்டி அணைக்கும் காதல் அவன்
தூரம் இருக்கும் அணைப்பு அவன்
என்னை துரத்தி வரும் மெல்லிசை அவன்
இமைகளுக்கு இடையில் கண்ணீரும் அவன்
என் இதழுக்கு இடையில் புன்னகை அவன்
காதல் எனும் மூன்றெழுத்தினுள் அவன்
என்னை கொள்ளைகொண்ட நேசம் அவன்
வார்த்தைகள் பல சேர்த்தேன் என் காதலை உனக்கு உணர்த்த
கண்ணீரால் கைகோர்த்தேன் கண்மணி உன்னை காண
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
