தென்றல்
தென்றலே உனக்கேது கட்டுப்பாடு
பொதியமலை உச்சியில் ஜனித்து
தாயின் மடிமீது விளையாடி
பிள்ளையாய் தவழ்ந்து வந்து
வைகை நதி மீது கால்வைத்து
நதி அலைகள் மீது உறவாடி
பக்கத்து சோலைக்குள் புகுந்து
சோலைப்பூக்கள் எல்லாம் முகர்ந்து
என்மீது மோதி வாசமும் பரப்பி
நக்கலாய் கேட்கிறாயோ 'சோலையில்
இந்த வேளையில் உனக்கென்ன வேலை'என்று
உனக்கு தெரியாதா தென்றலே 'எல்லாம்
என் என்னவனுக்கே'...... போ போ தென்றலே
இதை அவனிடம் கூறி
அவனை அழைத்து வருவாயா ............தென்றலே