கனவு

ஏதேதோ எண்ணங்கள்
ஏதேதோ கற்பனைகள்
நாள்தோறும் நம்
உள்மனதை ஊடுருவ
நித்திரையில் கனவுகள்
நாம் காண வந்திடும்
கனவுலகில் சஞ்சரிக்கலாம்
கனவிலே கூட ஊஞ்சல் ஆடலாம்
கனவிலே விண்ணில் மிதக்கலாம்
ஆனால் கனவே வாழ்வேன்றெண்ணி
வாழ்வை வீணாக்கள் ஆகாது
கனவை நெனவாக்க நாம்
உழைத்திடலும் வேண்டும்
கனவுகளும் நிறைவேற
கவிதை எழுதுவதுபோல்
கனவு காணலாம்
கனவிலே கவிஞனாய்
எண்ணி மகிழலாம்
நினைவில் வந்தபோது
கவிதை எழுதி பழகவேண்டும்
இலக்கணமும் அறிந்துகொள்ளவேண்டும்
கவிதைகள் புனைந்து பார்க்க வேண்டும்
கனவும் பலிக்கும் கவிஞனாய் ஆகலாம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (28-Aug-18, 5:43 am)
Tanglish : kanavu
பார்வை : 121

மேலே