ராகங்கள் மௌனமானால்

ராகங்கள் மௌனமானால்
இசைவீணை என்ன செய்யும் ?
ராகங்கள் மௌனமானால்
இசைக்கலைஞன் பாவம் என்ன செய்வான் ?
ராகங்கள் மௌனமானால்
உன் புன்னகை இதழ்களில் அடைக்கலம் புகும்
என் கவிதை மனம் அதை மீட்டிப் பார்க்கும் !

எழுதியவர் : கவின் சாரலன் (28-Aug-18, 9:57 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 62

மேலே