ஓசூர் சாலையில் ஒத்தயாய் நான்

மாலை நேரம் பணிமுடிந்து பயணிக்கிறேன் சூடேஸ்வரர் ஆலயம் கடந்து பார்த்தசாரதி
ஆலய பாதையில்...

நேதாஜி வழியா காந்தி வழியா
யோசித்து காந்தி (ய) வழியில் புகுந்தேன்...

சிறிது தூரம் கடந்து பின்
நேதாஜி வழியை அடைந்தேன்..

காவிரி வந்து கால் நினைக்காமல்
செல்வதா... காமராஜர் முதல் குறுக்கு தெரு புகுந்து பின் காந்தி சாலையில் கலந்தேன்..

கால்வைக்க இடமில்லாத தெருக்கள் எல்லாம் கடை மூடி களையிழந்து
கடந்து செல்கிறது.. தன்னந்தனியே நீ இல்லாமல் நான் நடக்கயில்...

காந்தி சாலை கடந்து பின்
தேசிய நெடுஞ்சாலையில் கலந்து
பயணித்தேன்....

எல்லா சாலைகளும் தேசிய நெடுஞ்சாலையில் முடிகின்றன...
என் பாதைகள் அனைத்தும்
உன்னில் தொடங்குகின்றன...

எல்லாம் முடிந்து ஓசுரின் சாலைகளில் மீண்டும் பயணிக்கிறேன் நீ இல்லாமல்
முகில் மறைத்த அமாவாசை இரவின்
நிழலாய்....

எழுதியவர் : சந்தோஷ் (28-Aug-18, 8:17 pm)
சேர்த்தது : சந்தோஷ்
பார்வை : 82

மேலே