உயிர் மூச்சாய்

ஆற்றும் கடமை உயிர்மூச்சு
அதிலே யில்லை மறுபேச்சு,
வேற்று நினைப்பே மனதிலில்லை
வேலை செய்வதே வாழ்வினெல்லை,
நேற்று நினைப்பு நெஞ்சிலில்லை
நினைவில் கவலை கொஞ்சவில்லை,
ஆற்று நீரும் அரையடிதான்
அதனால் வாழ்வே ஆறாகுமே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (29-Aug-18, 7:16 pm)
Tanglish : uyir moochchaay
பார்வை : 235

மேலே