காதல்
பார்வை நம்மை சேர்த்துவைக்க
நித்தம் நித்தம் இதுவரை
ஒருவரை ஒருவர் கண்டுகொண்டுதான்
இருக்கின்றோம் புன்னகைத்து
மௌனமொழியிலும் பேசி பேசி
உன்னை பார்க்க பார்க்க
உன்மீது பொங்குதடி ஆசை
என்னருகில் நீ வந்துவிட்டால்
உன்னைத் தொட்டு உறவாட
சொல்லுமடி ஆசை ........
ஆசை முத்த முத்த
என்னுள் முட்டுதடி மோகம்
முத்த முத்த மோகம் முத்த முத்த
என்னுள் ஒரு தீயாய் வளருதடி காமம்
நெஞ்சத்தில் ஒன்றிவிட்ட நாம்
இன்னும் ஒட்டி உறவாட தயங்குவது ஏனோ
ஒட்டி உறவாடி கட்டி தழுவி
முத்தும் காமத்தில் முத்து மழையில்
நனைந்து முத்த முத்த வந்த
காமத்தீயும் தணிந்து அணைந்திட
காதல் தென்றல் வந்து வீச
இன்பம் காண்போமாடி வாழ்வில்
காதலராய் ஈருடல் ஓருயிராய்
வாழ்ந்திடுவோம் எப்போதும் இணைந்தே
பொல்லாப் பிரிவின் கண்படாது.
மனம்புரிந்த காதலராய்
மணம்புரிந்து.