வண்ணப் பூக்கள்
வண்ணப் பூக்களாய் மின்னிய
வாழ்வு...
மின்னல் தாக்கியதைப்
போல் கருகியதே...
இரவுக்கும் உண்டு ஒளி வீச
நிலவு...
எனக்கும் வாய்க்காதோ ஒளி வீசும்
வாழ்வு...
நிதம் வாழ்வே போராட்டம்
எள்ளி நகையாடி கேளிப்
பேசும் நயவஞ்சகர்கள் பலர்...
காத்திருப்பர் வேட்டையாடும்
புலிகளைப் போல்...
வள்ளுன்னு எலும்புத் துண்டை
கவ்வக் காத்திருப்பர்
நாய்களைப் போல்...