கூந்தலிலே மேகம் வந்து - பிலஹரி

சரத்பாபு – ஸ்ரீதேவி நடித்து, பாலநாகம்மா (1981) என்ற திரைப்படத்தில் கவியரசு கண்ணதாசன் எழுதி, இளையராஜா இசையமைப்பில் K.J.ஜேசுதாஸ் & S.P.ஷைலஜா பிலஹரி ராகத்தில் பாடும் பாடல் ‘கூந்தலிலே மேகம் வந்து’ எனும் பாடல். பாடலின் ‘தங்கமேனி சிற்ப சித்திரம், தத்தைப் பேச்சு முத்து ரத்தினம்’ எனப் பாடல் வரிகளில் பிலஹரி ராகம்

கூந்தலிலே மேகம் வந்து குடி புகுந்தாளோ கவியெழுத
கூந்தலிலே மேகம் வந்து குடி புகுந்தாளோ கவியெழுத

குறுநகை அமைத்தது இலக்கிய மேடை
கருவிழி வரைந்தது மன்மத ஜாடை (கூந்தலிலே)

செவ்வாழைக் கால்கள் சிங்கார தூண்கள்
செவ்வாழைக் கால்கள் சிங்கார தூண்கள்

நடந்தால் இடையொரு நடனம்...
நடந்தால் இடையொரு நடனம்

மேல்பாதிதனை பார்க்க ஒரு நூறு நாளாகும்
முடியலங்காரம் அடியை அளந்துவரும் கொடியென ஆடும் (கூந்தலிலே)

தம்தனம்தனம்தனம் தம்தனம்தனம்தனம்
தம்தம்தனம் தனம்தனம் தம்தனம்தனம்தனம்
தம்தம்தம்தனம் தம்தம்தம்தனம் தம்தம்தம்
தனம்தம்தம்தம்தனம்

தங்கமேனி சிற்பசித்திரம்...ஆ ஆ ஆ
தங்கமேனி சிற்பசித்திரம் தத்தை பேச்சு முத்து ரத்தினம்

தம்த னம்தனம் தம்த னம்தனம்

தங்கமேனி சிற்பசித்திரம் தத்தை பேச்சு முத்து ரத்தினம்
அங்கமொன்று காதல் மண்டபம் அங்கு பேசும் இன்பமந்திரம்

தம்த னம்தனம் தம்த னம்தனம்

அங்கமொன்று காதல் மண்டபம் அங்கு பேசும் இன்பமந்திரம்
கோடி மலரில் இவள் குமுதம்...தன னன

சுவைகூடும் நகையில் இவள் அமுதம்...தன னன னன
கோடி மலரில் இவள் குமுதம்...தன னன

சுவைகூடும் நகையில் இவள் அமுதம்...தன னன னன
கலசம் குலுங்கும் இளமையில் கவிஞன் மயங்கும்

கலைமயில் வீணைமேனிதனில் பின்குடங்கள் என
அசைந்து வரும் அணைக்க வரும் புது நிலவோ

கூந்தலிலே மேகம் வந்து குடி புகுந்தாளோ கவியெழுத
குறுநகை அமைத்தது இலக்கிய மேடை

கருவிழி வரைந்தது மன்மத ஜாடை
கூந்தலிலே மேகம் வந்து குடி புகுந்தாளோ கவியெழுத

யு ட்யூபில் ’koonthalile megam vandhu song | கூந்தலிலே மேகம் வந்து‘ என்று பதிந்து இப்பாடலைக் கேட்டு ரசிக்கலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (31-Aug-18, 10:44 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 716

சிறந்த கட்டுரைகள்

மேலே