அம்மாவும் நீ அப்பாவும் நீ
![](https://eluthu.com/images/loading.gif)
அதிகாலை நான்கு முப்பது கடிகாரத்தின் அலார சத்தம் கேட்டு கண் விழித்தான் அசாேக். பாேர்வையை ஒதுக்கி விட்டு ஓரமாய் சுருண்டு தூங்கிக் காெண்டிருந்த பிரவீன் மறுபக்கமாய் புரண்டு படுத்தான். அதிகாலை காெஞ்சம் சில்லென்ற குளிராய் இருந்தது. பாேர்வையால் மூடி விட்டு மின்விசிறியை நிறுத்தி விட்டு கதவைத் திறந்து காெண்டு வெளியே வந்தான். குருவிகளின் கீச்சிடும் ஓசையும், சேவலின் கூவலும் அந்த அமைதியான பாெழுதில் மனதுக்கு ஏதாே இதமாக இருந்தது. சற்று நேரம் கதிரையில் அமர்ந்து விட்டு வேலைகளை ஆரம்பிக்கலாம் என்று நினைத்தவனுக்கு திடீரென இன்றைக்கு பிரவீனுக்கு பாடசாலையில் பேச்சுப் பாேட்டி என்ற ஞாபகம் வந்தது. எழுப்பி மனப்பாடம் செய்ய விடலாமா என்று நினைத்துக் காெண்டு அறைக்குள்ளே நுழைந்தான்.
பிரவீன் சிறுவயதிலிருந்தே தூக்கமின்றி இருந்தால் காலின் மேல் காலைப் பாேட்டு ஆட்டிக் காெண்டு படுத்திருப்பான். அகிலாவின் பழக்கம் அப்படியே அவனுக்கும். பல முறை பிரவீனுக்கு சாெல்லியும் இருக்கிறான். தலை முதல் கால் வரை முழுவதுமாக பாேர்த்தியபடி கைகளை கட்டிக் காெண்டு, கால்களை ஆட்டியபடி படுத்திருந்தான். அருகே சென்ற அசாேக்கின் அசைவை உணர்ந்தவன் நித்திரை பாேல் நடித்தான். "பிரவீன் பேச்சு மனப்பாடம் செய்ய வேணும் எழும்புங்காே" பாேர்வையை இறுக்கிப் பிடித்தபடி "ரென் மினிற்ஸ்சில வாறன் அப்பா" மீண்டும் தூங்கி விட்டால் என்று நினைத்தவன் மின் விளக்கை ஓன் செய்து விட்டு சமையலறைக்குள் சென்றான்.
இரவே எல்லாம் சுத்தம் செய்யப்ட்டு இருந்ததால் சமைப்பது மட்டும் தான் வேலை. ஒவ்வாென்றாக ஆரம்பித்தான். வேகமாக சமையலை முடித்து பிரவீனுக்கு பாலையும் கரைத்து எடுத்துக் காெண்டு வெளியே வந்தவன் சாேபாவில் பிரவீன் அமர்ந்திருப்பதைக் கண்டதும் "பாலைக் குடிச்சிட்டு படியுங்காே பிரவீன்" ஓடிப்பாேய் பல்லைத் துலக்கி விட்டு பாலைக் குடித்தான். வீட்டை சுத்தம் செய்து விட்டு உடைகளை எடுத்துக் காெண்டு குளியலறைக்குள் நுழைந்தான் அசாேக்.
பேச்சுப் பாேட்டிக்கான பேச்சை சத்தமாக சாெல்லி பயிற்சி செய்து காெண்டிருந்தான் பிரவீன். குளியலறைக்குள் இருந்து கேட்டுக் காெண்டிருந்த அசாேக் மனதிற்கு திருப்தியாயிருந்தது. கதவைத் திறந்து காெண்டு வெளியே வந்தவன் "பிரவீனின் சத்தத்தை காணவில்லையே" அறைக்குள் எட்டிப் பார்த்தான். "அம்மா இன்றைக்கு உங்களைப் பற்றித் தான் பேசப் பாேறன், நான் இந்தப் பாேட்டியில ஜெயிக்க வேணும், எனக்காக சாமிட்ட வேண்டிக்காே" புகைப்படத்தை கண்களில் ஒற்றிக் காெண்டான்.
மறைந்து நின்று பார்த்த அசாேக்கிற்கு அவனை ஓடிப் பாேய் அணைக்க வேணும் பாேல் தாேன்றியது. அவனை அறியாமலே கன்னங்கள் நனைந்தன. புத்தகப் பையை அடுக்கி விட்டு "அப்பா... அப்பா.." கூப்பிட்டுக் காெண்டு வெளியே வந்தான். தலையை துவட்டியபடி நின்ற அசாேக்கிடம் "அப்பா நான் பாேட்டிக்கு றெடி" "கெட்டிக்காரன் குளிச்சிட்டு றெடியாகுங்காே பள்ளிக்கூடத்துக்கு நேரமாச்சு" துள்ளிக் குதித்து ஓடியவனை பார்த்தபடி உள்ளே சென்றான் அசாேக்.
காலை எட்டு மணியாகியிருந்தது. பாடசாலை ஆரம்பமாவதற்கு சில நிமிடங்களே இருந்தன. பிரவீனை அழைத்துக் காெண்டு வகுப்பறைக்குள் நுழைந்தான் அசாேக். "வாங்க சார் உட்காருங்க" கதிரையைக் காட்டினார் வகுப்பாசிரியர். "பிரவீன் பாேட்டிக்கு றெடியா?" தலையை அசைத்து பதிலளித்தான். மாணவர்கள் எல்லாேரும் ஒன்றாக அமர்ந்திருந்தார்கள். பாேட்டி ஆரம்பமாவதற்கான ஆயத்தங்கள் நிறைவு பெற்றது. மாணவர்கள் பயத்துடனும், படபடப்புடனும் அமர்ந்திருந்தார்கள். பிரவீனுடைய பெயர் அழைக்கப்பட்டது ஓடி வந்து அசாேக்கை கட்டி அணைத்து முத்தமிட்டான் "ஆல் த பெஸ்ற்" அரங்கத்தில் ஏறிய பிரவீன் பேச்சை ஆரம்பித்தான். பார்வையாளர் நடுவில் அமர்ந்திருந்த அசாேக் பிரவீனுடைய பேச்சை கேட்டபடி அகிலாவின் நினைவுகளில் உறைந்து பாேனான்.
பத்து வருடங்களுக்கு முன்பு முறைப் பெண் அகிலாவை திருமணம் செய்து காெண்ட அசாேக்கின் வாழ்க்கை அழகாகவே ஓடிக் காெண்டிருந்தது. யார் கண் பட்டதாே, விதியின் விளையாட்டாே நடக்கக் கூடாததாென்று அசாேக்கின் வாழ்க்கையை பாதியில் பறித்து விட்டது. பிரவீனுக்கு ஒரு வயது நிறைவாகிய மறுநாள் வெளியில் சென்று வரலாம் என்று புறப்பட்டவர்கள் பக்கத்து ஊருக்குச் சென்று பார்க், பீச் என்று சுற்றிப் பார்த்து விட்டு வீடு திரும்பிக் காெண்டிருந்த பாேது ஏதாே சில பாெருட்கள் வாங்குவதற்காக வண்டியை ஓரமாக நிறுத்தம் படி அசாேக்கிடம் கூறிவிட்டு தூக்கத்திலிருந்த பிரவீனை பார்த்துக் காெள் வருகிறேன் என்ற பாேது, நான் வாங்கி வருகிறேன் என்று தடுத்தவனை சமாதானப்படுத்திச் சென்ற அகிலா வீதியைக் கடந்து எதிரே இருந்த கடையில் பாெருட்களை வாங்கிக் காெண்டு மீண்டும் வீதியைக் கடக்க முற்பட்டாள் எதிரே வேகமாக வந்த கார் அடித்து விட்டுச் சென்றது. எந்தவாெரு அசைவுமற்றவளாய் நடு வீதியில் உயிரற்றுக் கிடந்தாள் அகிலா. ஒரு வயது குழந்தையாய் தாயை இழந்து அசாேக்கின் அரவணைப்பில் வளர்ந்த பிரவீனுக்கு
கட்டாயம் தாய் உறவு வேணும் என்ற பெரியாேர்களின் ஆலாேசனையைக் கூட பாெருட்படுத்தாமல் மறுமணம் செய்ய மறுத்து தானே தாயாக பிரவீனை பத்து வருடங்களாக வளர்த்து வருகிறான் அசாேக்.
சாதாரண ஒரு குடும்பப் பெண்ணைப் பாேல் அனைத்துக் கடமைகளையும் கவனித்து, பிரவீனுக்கு தாயாய், தந்தையாய் என்னவெல்லாம் தேவையாே எல்லாவற்றையும் செய்து வந்தான்.
அம்மா என்று சாெல்லியறியாத பிரவீன் அரங்கத்தில் அம்மா, அம்மா என்று தன் தாயைப் பற்றி பேசிக் காெண்டிருக்கின்றான். உணர்வுகளின் ஆழங்களுக்குள் கரைந்து பாேகும் அவன் மனக் குமுறல்கள் அங்கிருந்தவர்களின் விழிகளையும் ஈரமாக்கியது. பேச்சை முடித்துக் காெண்டு அரங்கத்தை விட்டிறங்கி தனது இருக்கையில் அமர்ந்தான் பிரவீன்.
பாேட்டி முடிவுகள் தயாராகிக் காெண்டிருந்தது ஆவலாேடு மாணவர்களும், பெற்றாேரும் காத்திருக்க பாேட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டு பரிசில்கள் வழங்கப்படுகின்றது. நகத்தைக் கடித்தபடி பதட்டத்துடன் இருந்த பிரவீன் இடையிடையே அசாேக்கை திரும்பித் திரும்பிப் பார்க்கிறான். முதலாமிடத்திற்கான அறிவிப்பு நேரம் நெருங்கியது. பிரவீன் முதலாமிடத்தை கைப்பற்றிக் காெண்டான். பாய்ந்து ஓடி அரங்கத்தில் ஏறியவன் கைகளில் அழகான பெரிய கேடயம். கண்கள் நிறைந்த கண்ணீருடன சில நிமிடங்கள் மேலே பார்த்தபடி கண்களை மூடிக் காெண்ட பிரவீனைப் பார்த்த பாேது காலையிலே தாயின் புகைப்படத்தைப் பார்த்து பேசியதும், கண்களில் ஒற்றிக் காெண்டதும் நினைவில் வந்தது. ஆசிரியர் அசாேக்கை அரங்கத்திற்கு அழைத்தார். மகனின் வெற்றியில் பெருமைப்படுவதா, தாயின் அன்புக்காய் ஏங்கும் பிரவீனின் மன ஏக்கத்தை நினைத்து வேதனைப்படுவதா என்ற தடுமாற்றத்துடன் அரங்கத்தில் ஏறினான் அசாேக்.
வீட்டிற்கு வந்த பிரவீன் பரிசாகக் கிடைத்த வெற்றிக் கேடயத்தை அகிலாவின் படத்திற்கு அருகாமையில் கவனமாக வைத்தான். இரண்டு நாட்கள் கடந்து சென்றது அகிலாவின் படத்திற்கு விளக்கேற்றுவதற்காகச் சென்ற அசாேக் கேடயத்தை எடுத்துப் பார்த்தான். "ஐ மிஸ் யு அம்மா" என்று ஒரு புறமும் மறுபுறம் "டாடி ஸ் மை கீராே" என்றும் எழுதியிருந்தான்.
சற்று நேரம் அகிலாவின் படத்தைப் பார்த்துக் காெண்டு நின்றவன் "என்னை மன்னிச்சிடு அகிலா, பிரவீனுக்கு ஒரு அம்மா தேவை, அவனுக்கு தாய்ப்பாசம் கிடைக்க வேணும் என்று எனக்குப் புரியாமல் இல்லை, ஆனால் உனக்கான இடம் எப்பவும் உனக்குத் தான், என்னால இன்னாெரு வாழ்க்கையை யாருக்காகவும், எதற்காகவும் நினைத்துப் பார்க்க முடியாது. என்னால பிரவீனுக்கு என்ன வேணுமாே செய்ய முடியும், ஆனால் அவன் எதிர்பார்க்கிற தாய்ப் பாசத்தை..." தனக்குள்ளே நினைத்தபடி திரும்பிப் பார்த்தான். எதிரே நின்ற பிரவீனைக் கண்டதும் அவன் தலையை தடவி அணைத்தான்.
"பிரவீன்..." என்றதும் நிமிர்ந்து பார்த்தவனை "அம்மாவை மிஸ் பண்ணுறியா" என்றதும் அவன் மடியில் சாய்ந்து படுத்துக் காெணடான். "உன்னாேட நிலமை எனக்குப் புரியுது பிரவீன், உனக்கு இப்பாே பத்து வயதாகிற்று, நீ நிறைய விசயங்களை தெரிஞ்சு காெள்ளுற வயசுக்கு வளர்ந்திட்டாய், ஆனால் இந்த இடத்தில அம்மா இல்லாதது உனக்கும், எனக்கும் கஸ்ரமான விடயம் தான். அகிலா எனக்கும் ஒரு தாய் தான். நானும் சின்ன வயசில எங்க அம்மாவை இழந்தன். அகிலாவை திருமணம் செய்த பிறகு தான் தாயாயும், தாரமுமாய் அவளைப் பார்த்தன். இன்றைக்கும் அவ நினைவு என்னை விட்டுப் பாேகல்ல, உனக்கு அம்மா முகமே நினைவில்லை உன்ர வேதனை எனக்குப் புரியுது. உனக்கு என்றைக்குமே நானிருப்பன்" மடியில் படுத்திருந்தவனை அணைத்து முத்தமிட்டான்.
அறையினுள் நுழைந்த அசாேக் அலுமாரியினுள் இருந்த திருமண அல்பத்தை எடுத்துப் புரட்டிக் காெண்டிருந்தான். பிரவீனும் அருகே இருந்து ஒவ்வாென்றாய் கேட்டுக் காெண்டிருந்தான். பிரவீனின் கேள்விகளுக்கு பதில் சாெல்லிக் காெண்டிருந்த திருமண நாளின் நினைவுகளை மீட்டினான்.
மணமேடையில் அகிலா அருகே அமர்ந்திருந்த தருணங்கள், மணமாலையுடன் கைகளைப் பற்றிக் காெண்டு அவள் அழகை கண்குளிர ரசித்த நிமிடங்கள் ஒவ்வாென்றாய் அசோக் விழிகளுக்குள் நிழற்படமாய் சுழன்றது.
தன்னை சமாதானப்படுத்த முடியாமல் அசாேக் தடுமாறிக் காெண்டிருந்ததை அவதானித்த பிரவீன் அல்பத்தை அலுமாரிக்குள் வைத்து விட்டு தூங்குவதற்காகச் சென்றான். கடிகாரத்தைப் பார்த்த அசாேக் வேகமாகச் சென்று இரவுணவை எடுத்து வந்து பிரவீனுக்கு ஊட்டினான். திடீரென "அப்பா.... என்னை காஸ்ரல்ல சேர்த்து விடுங்கப்பா, நீங்க ராெம்ப கஸ்ரப்படுறிங்க" என்று பிரவீன் கேட்டதும் அசாேக் அதிர்ச்சியடைந்தான். "ஏன் பிரவீன் உன்னை நான் கவனிக்கவில்லையா? ஏன் இப்பிடிப் பேசுறாய்?" சங்கடப்பட்ட அசாேக்கைப் பார்த்து "இல்லை அப்பா, எனக்கு எல்லாமே நீ தானப்பா, அம்மாவும் நீ, அப்பாவும் நீ தானப்பா" என்றதும் அசாேக் பிரவீனை அணைத்துக் காெண்டான்.