கர்மவீரர் காமராசர்

விருதையில் விழுதாய் உதித்துத் தழைத்து
கருமரமாய் நினது சுயத்தடம் பதித்தாய் !
அடியோ னடைந்துக் கடந்தப் பேந்துயரை
இனியெவனோனையும் அண்டாமல் காத்தாய் !
எச்சிகரம் எட்டினும் தற்குடிப் பிறழாமல்
இச்சையான உடைமையற்று துற. வாழ்ந்தாய் !
கறையாய் கரைந்த இருள் ளுலகில்
உன்பறையால் எத்திசைக்கும் விதிவிலக்கானாய் !
உனை நினைவு கூரமாட்டோ மென்றும்
நினைவுச் சின்னமாய் நினைந்துப் போற்றுவோம் !
உழனும் உழுதுண்டு பெருவாழ்வு வாழ
உயரணைகள் பலத்தடுத்து வாழ வகையமைத்தாய் !
கல்லேனாயினும் சிறப்பறிந்து தனதெதிர்த் தலைமை
கற்றறிந்திட பலப்பாடச் சாலைக்கு வித்திட்டாய் !
முக்கண் ணுடையோனே னந்தாதி யாயினும்
எக்கண் திறந்த. யாமே முழுமுதலானாய் !
யெமை ஈன்றால் ஓரிருர் சிறுப் பேரிடலாம்
உமை ஈன்றதால் இவ்வுலமே பேரடைந்த ஐயா !
ஆதவனாய் தினந்தோன்றி மறையாமல் நின்றாயென்றும்
அடியோர் நெஞ்சத்தில் “ கல்விக் கண்” செம்மலாய் !
- கர்மனின் அடியோனாய்
மா- சங்கர்