ஆசான்

பள்ளிக்கூடம் எனும்
மருத்துவமனையில்
அறியாமை எனும்
குருட்டை அகற்றி
அறிவு எனும்
ஒளியை புகுத்த
என் கண்களுக்கு
கல்வி எனும் சிகிச்சை செய்த
என் ஆசானும் ஒரு மருத்துவரே
இல்லையேல் வள்ளுவன் சொல்லுக்கேற்ப நான்
முகத்தில் இரண்டு புண்களோடு
அலைந்திருப்பேன்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (5-Sep-18, 3:55 pm)
Tanglish : aasaan
பார்வை : 1665

மேலே