காதலால் கனிந்துருகி
காதலால் கனிந்துருகி
காதலுக்கினியவளே
கன்னம் சிவந்தவளே
கொஞ்சும் தமிழழகே
கோவை இதழழகே
கெஞ்சும் மொழியழகே
வஞ்சி நீ தனியழகே
சில் என்று சிரிப்பவளே
கொள் என்று கொடுத்தவளே
இதயத்தில் நுழைந்தவளே
உதயத்து தாரகையே
சமயத்தில் வருவாயா
இமயத்தில் குடிபெயர்வோம்
உலகத்தை புறந்தள்ளி
மலை மீது வாழ்ந்திடுவோம்
உனக்காக நானும்
எனக்காக நீயும்
மனதாலே இசைவுற்று
மஞ்சத்தில் கூடிடுவோம்
நெஞ்சத்து ஆசைகளை
மழலைகளாய் மாற்றிடுவோம்
புதியதோர் ஊர் சமைப்போம்