தலையணை அனைத்தேன்
நீயென நினைத்து தலையணை அனைத்தேன்
நித்தம் தூக்கத்திலே...
பிம்பத்தை பார்த்து தனியே சிரித்தேன்
உன்விழி தாக்கத்திலே...
காதல் என்னும் பூக்கள் பூத்தது
என்மன தோட்டத்திலே...
அப்பூவும் வாடும் என்பதை உணர்ந்தேன்
உன்முக வாட்டத்திலே...