வந்துவிடு அன்புக்கணவா
அன்புக்கணவா
உன்னை
பிரிந்து வாடுகின்றேன்
உன் நினைவா!
நீ சென்ற பின்
வீடுதோறும்
தோன்றி மறைகின்ற
தொலைதூர
பச்சையாய்
உன் உருவம்!!
வீட்டினில்
உன் புகைப்படத்தை
கடக்கும் போதுகூட
உன் விழிகளால்
இழுக்கப்படும்
என் முந்தானை!!
உன் குறுஞ்சிரிப்பே அழகென்று
நினைவில் கொள்ளாத
உன்
குறுந்தகவல் ஸ்மைலிக்கள்!!
காக்கை கரைந்ததனால்
தலைவனது வருகை என்று
காக்கையை
விருந்துக்கு அழைத்திட நினைத்த
குறுந்தொகை பெண்ணாய்
நம்
வீட்டு முற்றத்தில்
காக்கை கரைவதை
எண்ணி
கதவின் வழியே
காத்துக்கிடக்கும் என் விழிகள்!
உன் நினைவுகளுடன் புரியாமல்
புரள்கின்ற புத்தகத்தின்
பக்கங்களோடு
அலையென அலைந்து
கொண்டிருக்கும்
தொலைக்காட்சி அலைவரிசைகள்!
உன் முகத்தை போல
அதிகமாய்
நோக்கியதாய்
முறைத்துக்கொண்டிருக்கும்
கடிகார முற்கள்...
உருவங்களை விழிகளில்
கொண்டு உறங்காமல்
உருகும் விழிகளில்
உன் விழிகளை கோர்த்திட
வந்து விடு
அன்புக்கணவா!!!!