என்ஜீவன் உள்ளவரை
மறக்க மாட்டேன் கண்மணியே!
கடற்கரை மணலில் கதைகள், பேசிக்கொண்டு கால் வலிக்க நடந்த நிமிடங்கள்!
கையோடு கை கோர்த்து கனவுகளை வளர்த்து கொண்ட நிமிடங்கள்!
தோளோடு தோள் சாய்ந்து, என் இதயத்துடிப்பில் உன் மொழியின் இனிமையை எனக்குள் விதைத்த நிமிடங்கள்!
செல்லமாய. சண்டையிட்டு கோபப்பட்ட நிமிடங்கள்!
விழியில் வழியும் கண்ணீரை துடைத்து விரல்களாலே ஆறுதல் சொன்ன நிமிடங்கள்!
என
இன்று கழிந்த இனிய நிமிடங்கள.
எதையும் மறக்கமாட்டேன் கண்மணியே!
என் ஜீவன் உள்ளவரை!