காத்திரு கண்மணியே

எத்தனைமுறை
பார்த்துக் கொண்டிருந்திருப்போம்
ஆனாலும் போதவில்லை

எத்தனை மணிநேரங்கள்
பேசிக் கொண்டிருந்திருப்போம்
ஆனாலும் போதவில்லை

எத்தனை வருடங்கள்
காதலாகி
கசிந்துருகிருப்போம்
ஆனாலும் போதவில்லை

விட்டுசென்ற
கடமைகளை முடித்து
ஒருநாள்
இறந்து பிறக்கிறேன்
அதுவரை
கல்லறையில்
கண்ணுரங்கு கண்மணியே

மீண்டும்
பார்த்துக் கொள்வோம்
பேசிக் கொள்வோம்
காதலித்து
கசிந்துருகுவோம்
இந்த மண்ணில்.....

எழுதியவர் : சௌமியாசுரேஷ் (6-Sep-18, 11:00 pm)
சேர்த்தது : சுரேஷ்குமார்
Tanglish : kaathiru kanmaniye
பார்வை : 452

மேலே