முதல் காதல்
விழிகள்
பேசிய போது
வார்த்தைகள்
கனத்தது
வெளியே
வர துடித்தது
உதடுகளோ
உத்தரவன்றி
இதயத்திற்கு
கட்டுபட்டு
அங்கு
மௌனம்
பேசியது
இதயத்தில்
இடி
கண்களில் மழை
இருவருக்கும்
இடையே
உண்டான காதல்
சொல்லாமல்
தானே
கண்ணீரில் மூழ்கி
வெவ்வேறு வழியில்
பயணம்
இன்னமும்
இவர்களின் இதயத்தின்
மறைவில்
முதல் காதலாய் !