உள்ளத்தாமரை அவள்
உன்னோடு பேசிபார்க்கையில்
பெண்ணே, நீ உன் இதயத்தை
என்முன்னே திறந்துவைத்தாய்
அதில் அன்றலர்ந்த பூவாய்
செந்தாமரையைக் கண்டேன்
அதுவே உன் மனமென்று ஆம்
புனிதத் தாமரை அதுதான்
அதுவே நீ என்றும் புரியவைத்தாயே