காதலியை நினைத்து
பிரிவு வரும் என்று
முன்னமே
அறிந்திருந்தால்
உன் உறவே
வேண்டாம் என
இருந்திருப்பேனே
கண் இமைக்க
மறந்தேனே
உன்னை
காணாது இருப்பேன் என்று
பாவை நீ வரும்
பாதை அதில்
உன்
தடம் பார்த்து
காத்திருந்தேன்
சில காலம்
அதுவே
என் வேலையாக
நீ வரும்
பாதை
தேடி
உன் பாதம்
நோகும்
என
பூக்களை தூவி
வந்தேனே
ஊருக்குள் சந்திக்க
பேரு கெட்டு
போகும் என்று
கோவிலுக்கு
சென்றோமே
சாமிக்கு நினைவிருக்கும்
உனக்கு ?
தெரியாமல்
மழையில்
முகம்
நனைந்து
முடியாமல் இருந்தாயே
நானும்
தெரிந்தே நனைத்தேன்
உன் துயர்
நானும் காண...
காதல் தோல்வி
என்று
கேட்டிருக்கிறேன்
காதலுக்கு ஏது
தோல்வி
நாம் இல்லையேல் அது
வேறு
ஒருவரிடம்...
நட்சத்திர கூட்டம் எல்லாம்
நிலாவை
கூட்டி கொண்டு
நம் முற்றத்தில் வீற்றிருக்க
நம் முதலிரவை
வைத்துக்கொள்ள
எண்ணி
முழு கானா கண்டேனே...
கானல் நீர்
போல்
காதலும் கூட
கண்ணுக்கு தெரியாமல் போனதென்ன !
- பசுபதி