தற்கொலை முடிவு

வினாடிகள் விதைத்த எண்ண அலை
மீள முடியா
துயில் நிலை

சில நிமிடங்கள்
தரும்
தனக்கு தானே
தீர்வு என்று
எண்ண முடியா
துயர் நிலை

கோவம் மானம்
இரண்டில் ஒன்று
அதில் நிச்சயம்
உண்டு
துணிவு
என்று
தன்னை
இழந்து
திரும்ப முடியாத
உலகம் செல்வார்

உயிரை பூட்டி வைக்க
சாவி வேண்டும்
என்று இறைவனிடம்
கேட்க ண்டும்
உன்னிடம் இருந்தால் தானே

ஒரு
நொடியில்
ஒரு முடிவு

விண்ணிலே
பறக்க எண்ணி
என்னை ஏன்
சிதைக்கின்றாய்

உன் சிந்தையிலே
சில நேரம்
என்னை பற்றி
நினைத்திருந்தால்
தோன்றும் இந்த
எண்ணம்

கட்டிலிலே கலந்திருந்தோம்
காட்டிலே
தனித்து சென்றாய்
தொட்டிலிலே
நீ பெற்ற
செல்வம் நினைவில்லையா
விட்டு விலகி
சென்று விட்டால்
யார் போற்றி
வளர்ப்பார்கள்

நினைத்து பார்க்க
மாட்டாயா
நீ செய்த செயல்
இங்கே !

எழுதியவர் : த பசுபதி (7-Sep-18, 5:12 pm)
சேர்த்தது : பசுபதி
Tanglish : tharkolai mudivu
பார்வை : 282

மேலே