நாமும் நமக்கானவர்களும்
============================
ஒரு தேச ஆட்டை
ஐந்தாண்டுக்கொருமுறை
மாறி மாறி கூறுபோடும்
தேர்தல் கத்திகளின் கூர்மை
மழுங்குவதேயில்லை.
அதனால்தானோ என்னவோ
நல்ல இறைச்சியை எடுத்து
விதவிதமாய் சமைத்துண்டு
கொழுத்துவிடும் நாற்காலிகள்
சலுகைகள் என்கின்ற
எழும்புத்துண்டுகளை அவ்வப்போது
வீசித் தின்னவிட்டு நாயாக்கிப்
பார்க்கிறதோ நம்மை
**.