என்னுலகம்

உன் மூச்சுக் காற்று
என்னுள் மோகம் தூண்டுதே!

மூலிகை வாசமதை
உன் தேகம் காட்டுதே!

உன் காலடிச் சுவடை சுற்றிலும்
சிறு சிறு கோடு வரைந்தேன் ...
அக்கோடுகளையே இணைத்து எல்லையாக்கி
என்னுலகை அதிலே சுருக்கிக் கொண்டேன் ...!

காற்றிலும் மாசு நீக்கி
நீ சுவாசிக்க யாசிக்கிறேன் ...!

சிறு பார்வை துளிர்த்து...
என் ஆண்மையை தளிர்த்து..
என் வாழ்க்கையை ஒளிர்த்தாய்....!

தாகம் கொண்ட தேகத்தின்
மோகமது பாவமென்று
உன்னையே என்னுள்ளே தொலைத்தாய் ..!

நீ கொடுத்த மோட்சம்
என் வாழ்வின் விருட்சம் ...!

ஊனமுற்ற ஒரு பறவை
பல சிறகுகளால் பல தேசம் போகுதே ...!

பேருக்கு ஆர்வம் கொண்ட என்னை
பேரார்வம் கொண்டவனாய் யாக்கினாய் ..!

செம்புழுதிச் சேற்றில்
செம்பருத்தியாய் நீ...!

கலவரம் கொண்ட என் கனவில்
நகர்வலம் செல்ல வந்தவளே ...!

சிப்பிக்குள் முத்தாய் நானிருந்தேன்
என் சிந்தையின் சொத்தாய் நீ வந்தாய் ..!!.

எழுதியவர் : குணா (7-Sep-18, 10:50 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
பார்வை : 349

மேலே