காத்திருக்கிறேன்
மரிக்கொழுந்து
மலர்சூடியும்
வாசமில்லையடா..
நீ கூந்தல் வருடும்
இனிமை
தேன் தரவில்லையடா....
உன் பார்வைக்கு
எண்ணிருமுழ புடவை
உடல் மறைக்கவில்லையடா....
நீ என்றோ
தீண்டிய முந்தானை
உனை மறக்கவில்லையடா...
மனக்குதிரையில் தேரோட்டம்.
மனதிற்குள் போராட்டம்.
காற்றோட்டம் தேடும்
மனப்புழுக்கம்...
மறதியில் ஏதேதோ
மறந்துபோனேன்.
உனை மட்டும் புதுப்பித்து
தேடலானேன்....
விரைந்து வா மாமனே....
மயிர்கால்
நரை காணுமுன்னே....