கண்கள் மறைக்கப்பட்ட ஆண்கள்

உனக்கென்னடா தெரியும்?
பெண்கள் நம் நாட்டின் கண்கள்.
ஆமாடா எனக்கென்ன தெரியும்?
காமம் உன் கண்களை மறைக்கிறது.
பெண்கள் சுதந்திரமாக நடமாட முடிகிறதா?
ஆண்கள் மட்டும் கண்ணில் கண்டதை எல்லாம் மேய்வார்கள்.
பெண் திரும்பிப் பார்த்தால் போதுமே,
சந்தேகத்தோடு அவளை சித்திரவதை செய்வது?
பிறகென்னடா வெற்று பிதறலாய் பெண்கள் நம் நாட்டின் கண்கள் என்கிறாய்?

ஆசைக்கு இணங்கினால் பத்தினி என்பான்.
இணங்காவிடில் ஆயிரம் தரங்கெட்ட வார்த்தைகளை அஸ்திரங்களாய் எய்வான்.
தெரியாதா இவனைப் பற்றி?
ஊரில் பல காதல்கள் ஓடிப்போய் கல்யாணம் செய்வதற்கோ அல்லது தற்கொலை செய்வதற்கோ காரணம் அந்த தகப்பன்மார்கள் தான்.
கொடுமைப்படுத்தி ஓட வைத்துவிடுகிறார்கள்.

அங்கே என்ன பார்வை?
சகோதரனாக இருந்தாலும் அவனிடம் என்ன பேச்சு?
சந்தேகப் புத்தியுள்ள ஆண்களே முடிந்த வரை தனியாக வாழுங்கள்.
இல்லையெனில் போய் சேருங்கள்.
உணர்வுள்ள மென்மையான மனங்களைக் காயப்படுத்தாதீர்கள்.
கணவன் நடந்து கொள்ளும் விதத்தில் தான் உள்ளது மனைவி அவனை வெறுப்பதும் நேசிப்பதும்.
அதே போல் மனைவி நடந்து கொள்ளும் விதத்தில் தான் உள்ளது கணவன் அவளை வெறுப்பதும் நேசிப்பதும்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (11-Sep-18, 10:42 am)
பார்வை : 4201

மேலே