மனதை எடுத்துச் சென்றாள்

கற்றைக் குழல் கலைய
கருவண்டுக் கண்ணசைய
வட்டமிட்ட வண்ண நிலா
வந்தவளின் முகம் அமர
முற்றிய செங் கனியும்
மோவாயில் இதழ் விரிக்க
பற்றைப் பசுமை உடல்
பக்கமெல்லாம் நின்று மின்ன
ஒற்றையடிப் பாதை யிலே
உலவியவள் நடந்து வந்தாள்
கிட்ட நின்ற என் மனதை
கிளறியவள் எடுத்துச் சென்றாள்

அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (11-Sep-18, 1:53 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 434

மேலே