எவன்டா குண்டன்

(மாணவர்கள் எழுந்து நின்று):
வணக்கம் அய்யா.

வணக்கம் மாணவர்களே. அமருங்கள். யாரு இந்தப் புதுப்பையன்?

இன்னிக்குத்தான் நம்ம பள்ளில சேந்த பையன்.

அவம் பேரச் சொன்னானா?

இல்லீங்க அய்யா. வந்ததிலிருந்து
சிரிச்ச முகத்தோட எல்லோரையும் பாத்திட்டு இருக்கிறான். வருகைப் பதிவேட்டைப் பாருங்கய்யா. அவம் பேர எழுதியிருப்பாங்க.

அது எனக்குத் தெரியும். உக்காருடா.
K U N D A N. என்னடா அவம் பேரக் 'குண்டன்'னு எழுதியிருக்காங்க. ஏன்டா புதுப்பையா உம் பேரு 'குண்டன்'னா? என்னடா பேரு வச்சிருக்காங்க.

(புது மாணவன் எழுந்து நின்று)
அய்யா எம் பேரு குண்டன் இல்ல. எம் பேரு 'குந்தன்'.

தமிழ்ப் பையனா இருக்கிற உனக்கு குந்தன்னு பேரு வச்சிருக்காங்க?

அய்யா இந்த வகுப்பில எத்தனை மாணவர்கள் பேருங்க தமிழ்ப் பேருங்க?

அஞ்சு பேருடா.

தமிழ் நாட்டிலயே அறுபது மாணவர்கள் இருக்கிற வகுப்பில அஞ்சு மாணவர்கள் பேருதான் தமிழ்ப் பேரு. நான் பம்பாய்ல பொறந்து வளர்ந்த பையன். எனக்கு என்னப் பெத்தவங்க இந்திப் பேர வச்சிதில ஆச்சரியம் இல்லீங்க அய்யா. பம்பாயில தமிழர்கள் அதிகம் வாழும் பகுதில தமிழ முதல் மொழியாச் சொல்லித்தரும் ஒரு பள்ளிக்கூடத்தை தமிழர் ஒருத்தரு நடத்துறாரு. அந்தப் பள்ளில படிச்சவன் நான்.

சரிடா குண்டன். உட்காருடா. வாய் தவறிச் சொல்லிட்டேன். குந்தன் உட்காருடா.

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
Kundan = pure, gold.

எழுதியவர் : மலர் (12-Sep-18, 10:04 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 132

மேலே