அவரும் தமிழும்

மூவேந்தன் தமிழை முறையாக அறிந்தவர்
முத்தமிழை என்றும் தேன் சொட்ட சுவைப்பவர்
கறகறக்கும் குரலில் என்னை ஆட்கொண்டவர்
அகர முதல வென தமிழ் கடலில் குளித்தவர்
ஆயிரம் மொழி இருந்தும் தமிழை செம்மொழி என விதைத்தவர்
குமாரி கண்டத்தின் பெருமையை உலகம் அறிய செய்தவர்
செந்தமிழ் சூரியனாய் மதி மயங்கும் நிலவாய்
இவர் தமிழ் என்னை கொள்ளை கொள்ள
கருப்பு கண்ணாடி அணிந்து கையில் மைப்பேனா கொண்டு
அமர்ந்திருக்கும் காவியத்தலைவன் நீ !
அகநானூறு புறநானூறு பதிற்றுப்பத்து என என் அகமகிழ
தமிழை அல்லி பருகிட செய்தவர்
திராவிடத்தின் தென்றல் தமிழில் செல்லமகன்
கவிதைகளின் காதலன் செந்தமிழின் சூரியன்
இளம் மாலை வேலையில் நீர் மறைந்தாலும்
நீ விதைத்த தமிழ் என்றும் அணையா விளக்காய்
என்னுள் எரிந்துக்கொண்டே இருக்கும் ....

இப்படிக்கு
தமிழ் கிறுக்கன் ...

எழுதியவர் : ஹேமாவதி (13-Sep-18, 2:53 pm)
சேர்த்தது : hemavathi
Tanglish : avarum thamizhum
பார்வை : 517

மேலே