தாய்த் தமிழ்மொழி

செம்மொழி ; உயர்தனி மொழி ;
பைம்மொழி; பலவற் றுள்ளும்
தாயாய் நின்றொளிரும் எந்தன்
உயிர் நிகர் தமிழ்மொழி !
அண்டையறு மண்டி வந்து
தொண்டையிற் புகுமொழி !
கற்றுத் தேர்ந்தோரெலாம் தாய்வழி
ஆற்றிய நல்லறிஞ ராவரே ! இத்
தாய்மொழியிற் நல்லுறைச் செய்ய
நாக் கூசும் மாந்தரெலாம் !
உயிரற்ற கருபட்ட மரமும்
வெட்கு முனை வொப்பிட்டால் !
மொழியினம் அழிப்பால் உனது
அடையாள மழிவதை மறவாதே !
வழியினம் வாழ்த்தி யுனது
நிலையினம் நின்றுக் கொள்ளாதே !
பழிப்பேசி வீண்போகும் நாமெலாம்
கழிப்பில்லா கடைமை யாற்றுவோமோ !
நாழித் தவறாத் தொண்டரெலாம்
ஆழிப் பெருங்கடலாய் வீறுகொண்டு !
விழிப்புடன் முரசொலித்த தலைப்பாகன்
வழி நின்றுச்சொல் ! எந்தாய்
ஒழிவில்லா யென்றும் நின்ரொளிரு
மழிவில்லா மறத்தாய் மொழியாம் !
- எந்தாயும் தமிழ்த்தாயும் மறவோன் ; மா. சங்கர்