ரேடியோ

நாங்கள் எங்கே
(ரேடியோ)
காதுகளில் காலை தேநீர்
ஊற்றிக் கொஞ்சும்
விடியலை வீடெங்கும்
பரவசப்படுதினோமே ஞாபகம் உண்டோ?
ஊரெங்கும் உயிரோசை கேட்க
வீடுதோறும், காடு களநிஎங்கும்
தூக்கில் தொங்கித்
திரிந்தோமே மறந்து விட்டீரா?
கரகர குரலில் காதுகுடைந்து
மெல்லிய இரவுகளில்
கானலாய் கனவு கண்டு
தொலைந்து போய்விட்டோமோ?
விளக்கில்லா வீட்டில்
மின்மினி பூச்சி போல்
ஒலி ஒலியாய் ஆர்பரித்து
ஓய்ந்து போனோமே நினைவுண்டோ?
கந்தசஷ்டி கவசமாய் காலையிலும்
விளக்கேற்றும் நேரமாய் மாலையில்
உலகிற்கு அறிமுகபடுத்திவிட்டு- இப்போது
ஊர்தொலைந்து போனோமே!
வருடத்தில் தொலைந்தது வரலாறு
வரலாற்றில் தொலைந்தவர்கள் நாங்கள்
நாகரீக வயிறு விழுங்கியதில்
நாங்களும் உளோம்
கோடியுகம் கடந்தாலும்
நாங்கள் நாங்கள் தான்...
நாங்கள் எங்கே?...

எழுதியவர் : அன்பு (13-Sep-18, 8:10 pm)
சேர்த்தது : ANBARASU
பார்வை : 304

மேலே