முக்கடலாய் இணைந்திடுக

​----------------------------------​

​முடங்கிய கைகளோடு
முற்றத்தில் நிற்கிறேன்
​முன்னின்று கேட்கிறேன்

முகமூடி அணிந்துள்ள
முட்டாள் சாதிவெறியை
​முகம்கிழிய வைப்பீரே

முற்றிலும் அறிந்திடா
முகமறியா மதவெறியை
முழுவதும் அழிப்பீரே

​முதலுதவி செய்வதற்கும்
முன்வந்து உதவுவதற்கும்
முட்டுக்கட்டை சாதிமதமா

முகமலர வாழ்ந்திட
முன்னேற்றம் கண்டிட
முதலில் வந்திடுக
முன்னின்று வழிகாட்ட
முக்கடலாய் இணைந்திடுக !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (14-Sep-18, 3:51 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 176

மேலே