காலநேரம்

காலநேரம்

ஓடி ஓடி உழைக்கின்றன
கடிகாரத்தின் முட்கள்!

தேடித்தேடி கண்டிடினும்
பிடிபடவில்லை கழிந்த நாட்கள்!

மடி கொண்டு வீணில் கழிப்பவர்
வாழ்க்கை வெறும் புற்கள்!

நொடிநேரமும் பயனாக்குவர்
வாழ்வோ நறும் பூக்கள்!

மடி-சோம்பல்

எழுதியவர் : Usharani (16-Sep-18, 6:26 pm)
சேர்த்தது : usharanikannabiran
பார்வை : 125

மேலே