பாரதிதீ

இவர் சின்னசாமிக்கு பிறந்த பெரியசாமி
லக்குமி பிறந்த சரஸ்வதி
காக்கை குருவியும் தன் சாதி என்றவன்
கண்ணனுக்கு சேவகன்யானவன்
மாந்தர் முகத்துக்கு ஆசை வைத்து படாமல்
மீசை வைத்து பாடியவன்
புதுமை பெண்ணை படைத்த பிரம்மன் அவன்
சுதந்தர தீ வளர்த்த அக்னிகுஞ்சு
முண்டாசு கவியவன்
வெள்ளையனை வீரட்ட பாரதியின் பேனா முனையே
வாள்முனையானது.
பாரதியின் படைப்புகள் ஒவ்வொவென்றும் ஆயுத கிடங்கு
வார்த்தைகள் யாவும் கூர்வாள்கள்
பாரதிக்கு பயந்து காலன் கூட
எருமை ஏறி வராமல் யானை ஏறி வந்தானோ

எழுதியவர் : GANDHI (17-Sep-18, 1:08 pm)
சேர்த்தது : gandhi
பார்வை : 47

மேலே