அவள் இதழ்கள்
உந்தன் ஸ்பரிசத்தால்
தாமரையாய் மலர்ந்த
என் இதழ்கள் உன்னை
கருவண்டாய் நினைத்து
வந்து சுவைத்திடு தேனை என்று
சொன்னதோ .. இதோ ,
வண்டாய் மாறிய என்
இதழ்கள் உன் இதழ்கள் மீது
உண்டு சுவைக்கின்றது
ஊரும் தேனை முத்தேன்
முத்தேன் என்று சொல்லி