விழிக்கதவு மூடித் திறந்தால்

மலர்க்கதவை மெல்லவே தென்றல் திறக்க
மனக்கதவை மெல்லத்தான் நீ

இதழ்க்கதவை புன்னகை மெல்லத் திறக்க
இதயக் கதவினை நீ

விழிக்கதவு மூடித் திறந்தால் எனக்கு
விடியலில் ஓர்பொன்மா லை

எழுதியவர் : கவின் சாரலன் (13-Feb-25, 7:24 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 23

மேலே