காதலினாலே

இளம் தென்றல்
தழுவிச் செல்லும்
மாலை - வேளையிலே!

மஞ்சள் வெயிலிற்கு
குடை பிடிக்கும்
சோலை - நடுவினிலே!

பசுமை கூந்தலுக்கிடையில்
வகிடெடுத்து ஓடும்
சாலை - முடிவினிலே!

அலையாடும் சருகாய்..........
தனிமை நதியாடும் குழலாய்.........
காத்திருக்கிறது இந்த
பூமாலை - காதலினாலே!

எழுதியவர் : சோட்டு வேதா (17-Sep-18, 4:46 pm)
பார்வை : 175

மேலே