ஜன்னல் ஒர பயணம் -சில்லென்ற காதல் சுவடுகள்

பயணிகளை சுமந்து செல்லும் பேருந்து போலவே
பேருந்தின் ஜன்னல் ஓரம் உன் நினைவுகளை சுமந்து செல்கிறேன்
பயணிகள் சத்தம் கேட்கவில்லை ,,
பேருந்தின் சத்தமும் கேட்கவில்லை ...
தனியே உன் குரல் மட்டும் ஒலிக்கும் ஓசை ..
உன் இரு விழிகள் கொண்டு என்னை பார்க்கிறாய் .
நான் பார்த்ததும் மறைக்கிறாய்.
இருவரும் அறியா நேரம் காதல் மலர்ந்தது
பேசுகிறோம் பழகுகிறோம்
உயிராகிறோம் ஒன்றாகிறோம்
நன்றாக உள்ளன நடப்பவை எல்லாம் .

பேருந்தின் சத்தம்.. இறங்கும் இடம் வந்து விட்டது .
ஆஹா ! வெறும் கனவு !

அன்று நம் வாழ்வில் நிஜத்தில் நடந்தவை எல்லாம் இந்து ஜன்னல் ஓரம் வெறும் கனவாய் :-(

எழுதியவர் : Niha (18-Sep-18, 1:06 pm)
சேர்த்தது : Niha
பார்வை : 299

மேலே