முத்தம்

இதழில் மலரும் பூ முத்தம்
முத்தத்தின் குழந்தையே சத்தம்
காதலன் எதிர்பார்ப்பது காதலியிடம் நித்தம்
கிடைக்காதபோது நடக்கிறது யுத்தம்
கிடைக்கும்போது நடக்கிறது மொத்தம்

சிப்பி ஒட்டிற்குள் முத்து
சிவப்பு உதட்டிற்குள் முத்தம்

காதலன் விரும்பும் பரிசு
கிடைக்கத்தவன் வாழ்க்கை தரிசு

மழலைக் கவிதை எழுத
தாளில் எழுதாது தோலில்
எழுதும் பிள்ளையார் சுழி

இருளில் பரிமாறப்படும் விருந்து
காதல் நோய்க்கு சாலச் சிறந்த மருந்து

முத்தம் கொடுக்கும்போது
சூடாகிறது ரத்தம்
குளிரடைவதோ பித்தம்
இதழ் ஆவது சுத்தம்
பூவிதழ் ஆவது சித்தம்
கொடுக்காமல் இருந்தால்
அது குத்தம்

உம்மா இல்லாது
அம்மா ஏது

சிறகுகள் இன்றி ஊதினாலே
பறக்கும் பறவை முத்தம்

செயற்கை குழந்தை
அலைபேசியில் கொடுக்கும் முத்தம்

கடலில் கிடப்பது முத்து
மனித உடலில் கிடைப்பது முத்தம்

முத்தம் இருபுறம் கூர் உள்ள கத்தி
ஒருபுறம் காமம் மறுபுறம் அன்பு

அன்பெனும் கத்தியே
பயன்படுத்துவோம்

எழுதியவர் : குமார் (19-Sep-18, 9:31 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
Tanglish : mutham
பார்வை : 348

மேலே