கோபமா வேண்டாமே

வணக்கம் நண்பர்களே:
கோபம் இப்பொழுது அனைவரிடமும் இருக்கும் ஒன்று. கோபத்தால் நாம் பல உறவுகளையும் பொருட்களையும் இழக்க நேரிடலாம்.அப்படிப்பட்ட கோபத்தை கட்டுப்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும்.இதோ ஒருகதை உங்களுக்காக
ஒருநாள் ஒரு துறவி தம் போதனைகளை பரப்பும் நோக்கத்தில் ஊர்ஊராக சென்றுகொண்டு இருந்தார். அப்போது ஒரு மனிதனுக்கு அந்த துறவியின் பொறுமையை சோதிக்க வேண்டும் என்று எண்ணினார். அப்போது அந்த மனிதன் துறவியை பார்க்க சென்றார். அந்த துறவியை பார்த்து இந்த மனிதர் பல அவதுரான வார்த்தைகளில் பேச ஆரம்பிக்கின்றார். ஆனால் துறவி யாதும் பேசாது அமைதியாக அமர்ந்திருந்தார். அப்போது அந்த மனிதன் துறவியைப் பார்த்து., குருவே நான் பேசிய வார்த்தைகளுக்கு உங்களுக்கு கோபம் வரவில்லையா என்று கேட்டான். அதற்கு குறு கூறினார் மகனே உனக்கு யாராவது ஆசைப்பரிசு கொடுத்தால் நீ வாங்கவில்லை என்றால் அது யாருக்கு சொந்தம் என்று கேட்டார்.அதற்க்கு மனிதன் அது கொடுத்த அவர்களுக்கே சொந்தம் என்று கூறினான். அப்படியானால் நீ எனக்கு இப்பொழுது வரை கொடுத்த ஆசைப்பரிசை நான் ஏற்றுக்கொள்ள வில்லை. என்று கூரினாறாம்.
இவ்வாறு கோபத்தை கட்டுப்படுத்தி வாழ்பவனே வாழ்க்கையில்சிறந்த மனிதன் ஆகிறான்.

எழுதியவர் : சிந்தனை சிற்பி ராஜலட்சும (20-Sep-18, 7:03 pm)
சேர்த்தது : Rajalakshmi
பார்வை : 600

மேலே