இந்தியன் யார்

இந்தியனால் இந்துவா


ஆசிரியப்பா
ஆதியிந் துவடா அணைவரும் இங்கே
பாதியில் புத்தனும் ஜீனரும் புகுந்தார்
அகத்தியர் புத்தரை சீனம் ஓட்டினார்
தகாமத மெனவேத் துரத்தினார் சீனம்
விகற்ப ஜைனர் இன்னுமிங் கிருக்க
சொற்ப சிப்பா யுடன்மா லிகாபூர்
தெற்கில் வாள்முனை மதமாற்றல் செய்தான்
அற்பன் உடைநடை கூட மாற்றினான்
தற்குறி மாலிக்கா பூர்மாற்றல்
தெற்கின் முஸ்லீம் மாற்றம் இப்படியே


முந்நூற் ரைம்பதாண்டு முன்னேப் பறங்கி
வெள்ளையக் கள்ளன் நம்மைஇந்து வென்றான்
பின் திராவிடர் எனகுழப் பினானே
அவன்வந்த பிறகே திராவிடம் வந்தது
அவனெழு தியதைப் படித்தவர் திராவிடரே
இந்தியத் தென்னவ ரில்பலர் ஏனோ
இந்தை விட்டார் காற்றில் ஏனோ
பிந்தைக் கிருத்தவ ரானார் ஏனோ
பெரிய புராணம் தேவாரம் திருவாசகம்
அரியசித்தர் விஞ்சான வாகடங்கள் மறந்தார்
அரியவு யர்கோ புரங்கள் மறந்தார்
அறிவிலா பகுத்தறி வாளன் பேச்சிலே
அறிவீர் மீதமுள்ள இந்துக்க ளறிவீரே
அறிவு கேட்டே போனார்
அறிவீர் பகுத்துப் பத்தாம் பசலிகளே

அறுசீர் கலிவிருத்தம்

நம்பும் சொன்னார் அரனுச்சிச் சடையில் பிறையின் இந்தாம்
வம்பாய் மார்பில் புலித்தோலும் அரையில் கரித்தோ லென்றார்
நம்பும் இந்த ணிச்சிவனை வணங்க அணைத்தும் இந்தாம்
சும்மா இல்லைச் சிவன்காட்சி கிடைக்கா அயன்மால் தோற்றாரே

கண்ட முன்னோர் விளக்கிட்டார் நமக்கும் அதையே ஏற்றோம்
கண்டார் பாதி யுடல்தாய்க்குக் கொடுத்த சிவனென் றார்கேள்
விண்டார் சொல்லைத் தகுதியென வுமேற்றோம் அடியார் நாமும்
தண்ட விதண்டா வாதமதில் இறங்கிநீ பொழுதைக் கழியாதேகுறிப்பு :-
1.அடிமைவம்சத்தைச் சேர்ந்த மாலிக்காபூர் 13 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தெற்கே வந்த அவன் வாள் முனையில் பல தமிழர்களை முஸ்லீமாக்கிச்சென்று விட்டான். காரணம் தமிழ் நாட்டில் ஒரு பெரிய அரசரும் அப்போது இல்லை.

2 . பழையதை யறியான் பத்தாம் பசலி.

எழுதியவர் : பழனி ராஜன் (25-Sep-18, 9:59 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 34

மேலே