தமிழ்க்காதல்

தமிழ்க்காதல்

சேதமில்லை தமிழ்மீது செய்யும் காதல்!
சேர்த்துவிடும் கவிச்செல்வ பெருக்க மாகும்!
பாதகமே செய்துவிடும் பொருள்மேல் காதல்!
பாழாகிப் போகும்பொருள்! மனம் பதறிப்போகும்!
ஏதாகுமோ என்றஅச்ச மில்லை! எந்நாளும்
கவலை யில்லை! கண்ணீர் இல்லை!
தீதாகும் தீவினைமேல் காதல் கொண்டால்!
தீராத வேதனை தானே மிஞ்சும்!
போதாத காலம்வரும்! பொருளோடு உடலழியும்!
போதைதரும் பொருள்மீதே காதல் கொண்டால்!

எழுதியவர் : கவி இராசன் (25-Sep-18, 10:56 pm)
பார்வை : 1170

மேலே