வலி
உன் நினைவுகளை
சிதைக்க துடிக்கின்றேன்
இருப்பினும் இயலவில்லை
இதயவறைக்குள்
இதமாக செதுக்கி
இயக்கம் கொடுத்துவிட்டதால்...
உன் விம்பக் கண்ணாடியை
உடைக்க முயல்கிறேன்
இருப்பினும் இயலவில்லை
என் நிழல் போல் உனை
ஆழ் மனதில் பதித்ததால் ....
வலி நிறைந்த நினைவுகளை
பரிசளித்து விட்டு - நீ
காணல் நீராய் மறைந்த
மாயம்தான் என்ன??
என் இன்பங்களை
உனக்காய் சிதைத்தேனள்ளவா
என் சுதந்திதத்தை
உனக்காக இழந்தேனள்ளவா
எனுயிரை குடித்தாய்
பொறுமையின் ஆழத்தில்
மூழ்கிக் கிடந்தேனள்ளவா
அனைத்தையும் அரை நொடியில்
அணைத்து விட்டதன்
மாயம்தான் என்னவோ ??
சுகம் கானும்
அற்ப பொருளாக எண்ணினாயோ ?
தலையசைக்கும் பொம்மையென
எண்ணினாயோ?
உன் பிரிவு ஒன்றும்
பெரிதில்லையெனக்கு
உன் பொய்யன்பிக்கு
அடிமையாகி விட்டேன்
அதிலிருந்து மீளவே
துடிக்கிறேன் - என்
மூலை உணர்த்துகிறது
இதயமோ மறுக்கிறது ....
............