சோறு போட்டவன்

சோறு போட்டவன்

எதிர் வீட்டிலே இருக்கிற
இளங்கோ கெட்ட பிள்ளை
நீதான் நல்ல பிள்ளை கண்ணா
என்று சோறூட்டிய
அன்னையர்களுக்கெல்லாம்
வளர்ந்த கண்ணன்
அமெரிக்கா சென்ற நாளிலிருந்து
இளங்கோதான் சோறு போடுகிறான்
===
மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (28-Sep-18, 2:34 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : soru pottavan
பார்வை : 124

மேலே