எண்ணித்துணிவாய்
சோம்பேறியாக நீ கிடந்தால்
சிலந்தியும் உன்னைச் சிறைபிடிக்கும் ,!!
சுறு சுறுப்பாக நீ இருந்தால்
சுனாமியும் இங்கு வழி கொடுக்கும், !!
முடியாது என நீ நினைத்தால்
மூச்சு காற்றும் விலகிவிடும் ,!!
முடியும் என எண்ணித்துணிந்தால்
வான் நிலவும் உன் பக்கம் வரும் ..!!
தன் நம்பிக்கையை கொண்டு நீ நடந்தால்
எண்ணியது எண்ணியவாறு கிட்டும் !!
பிறர் தரும் இடையூர்கள் எல்லாம்
இறையருளால் எரிந்து சாம்பலாகும் ..!!
எண்ணித்துணிவாய்
இறப்பிறர்க்கு முன் -உன்
வரலாறு படைப்பாய்….!!
என்றும் ...என்றென்றும்
ஜீவன்