மகளே வந்துவிடு

திக்கு தெரியா திசையினில்
திக்கி திக்கி தவிக்கின்றாய் மலரே!

வழி மாறிய பாதையில்
விழி மூடி கண்ணாமூச்சி ஆடுகின்றாய்!

உனை மறந்து உன்னைத் தேடிட
சுற்றி சுற்றி வருகின்றாய் உன்பின்னே!

நீ கைகோர்த்து நடக்கையில்
உன் பிஞ்சு விரலால் கால் பதிக்கையில் நட்சத்திரம் தரையில் போவதைக் கண்டேன்!

நீ தொலைந்து போவாய் என்று தெரிந்திருந்தால் !
என் கருவரைக்குள்ளேயே உன்னை ஒளித்து வைத்திருப்பேன்!

கண்மணியே!

இரவும் பகலும் தினம் கடந்து போகையில் கண்ணே!
என் கண்ணீர் துளிகளை
என் தலையணை மடியில் ஏந்துகிறேன்!

உனைக் காணும் தருணத்தை
கனவுகளாய் விதைத்துள்ளேன்!

வானவில்லையும் வளைத்தெடுப்பேன்
உன் நித்திரையை நான் காண!
துகிலாய் நான் இருப்பேன்
தேவதையே வந்துவிடு என்னோடு!

ஓய்ந்து விடாதே!
சூரிய விளக்காய் சுடர்விடு
உன் மொழி அறியா பாஷைகள்
போர்களம் ஆகட்டும்!
உன் கூக்குரல் எட்டுத்திசைகளும்
ஒலிக்கட்டும்!

ஒரு பொழுதும் ஒரு யுகமாய்
கழியுதடி கண்ணே!
மூச்சிரைக்க ஓடுகின்றேன்!

இமயம் ஏறிப்பட்டம் விட அல்ல
பட்டாம் பூச்சியாய்ச் சுற்றித் திரியும்
பூக்களைத் தேடி!
கதிரவனோடு போட்டியிட்டு கலைந்தே போனேன்!

தேவதைகள் யுத்தம் செய்ததை கண்டதில்லை நேரில்!
வெண் மேகங்களாய் சுற்றித்
திரிகின்ற வீதி ஓரமாய்
பாரதிகண்ட கனவினில்
இதுவும் புது விந்தையோ!

எழுதியவர் : வாழ்க்கை (28-Sep-18, 12:20 pm)
Tanglish : magale vanthuvidu
பார்வை : 51

மேலே