விடியலை நோக்கி

நீ காட்டும் பாசம்
நிறைகுடமாக வேண்டும்/
பாசத்தின் அறையாக
உன் மனம் வேண்டும்/
தேசம் வேறாயினும்
நிஜத்தில் நீ வேண்டும்./

கண் இரண்டும் என்னை
வெறுக்கும் வரை அழுது விட்டேன்/
இனிமேலும் அது தொடராது /
நிறுத்த நீ வேண்டும்./

இருண்ட காடு போல் /
அடர்ந்த ரோமம் கொண்ட/
உன் மார்பின் மேல்/
வீராப்பு நான் இழந்து /
பிரிவு அற்று சாய்ந்திட வேண்டும்./

பட்டுத்துணிக்கு நான் விலை பேசிட/
மெட்டி ஒலிக்கு நீ வழி பண்ண/
கொலுசு ஓசையும் உன்னை உசுப்பேத்த/
இவைக்கு நாம் இணை சேர வேண்டும்./

உன் முரட்டுக் கைகள் /
வித்தையை ஆரம்பிக்க /
என் வெட்கம் முன் நின்று தடுக்க /
முத்தச் சமையல் நீ கேட்க/
முகம் மூடி நான் சிரிக்க /
இச்சு இச்சு என்று/
உன் இதழ்கள் இசை அமைக்க/
இரவும் நீண்டு நிலவும்
காவல் காக்க வேண்டும்.;

உன் வெப்ப மூச்சியில் /
நான் வெந்திடவே/
அன்பு வார்தை /
மயக்கத்தை அழைத்திடவே/
உள்ளத்தின் குளிரில் /
உடலும் மயங்கிடவேண்டும்/

துளிர் விட்ட ஆசைகள்/
நிரந்தரமாக நம் இதயத்தில்/
வளர்ந்திட கரம் கொடுத்து;
நெற்றித் திலகம் நீ விடவேண்டும்/

நடை தளரும் வயதிலும் /
நானோ அல்லது நீயோ தடுமாறமால் /
தடி போல் துணையாக வேண்டும்./

இறப்பிலும் நாம் சேர்ந்தே இறந்தால்/
இறப்பும் இனிப்பாய் இருக்கும்/
இல்லயெனில் இறப்புத்தான்
நம்மை பிரிக்கவேண்டும்./

நாளை புலரும் பொழுது /
நாம் இணையும் பொழுதாகவேண்டும் /
என் காதல் கற்பனை நகருகின்றது /
இன்றும் விடியலை நோக்கியே./

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (28-Sep-18, 9:39 am)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : vitiyalai nokki
பார்வை : 177
மேலே