மாத்துக் குறையாத மட்டில்லா என் மாமன் மவளே
பூத்துக் குலுங்குதடி உன் புன்னகைத் தோட்டம்
யாத்துத் தோத்ததடி என் கவிமனத் தோட்டம்
ஆத்துப் படுகையில் முப்போகம் விளையும் நம் நன்னிலம்
நாத்துப் பசுமையில் நெல்விளைந்து நம் சோத்துப் பசியாற்றும் தோட்டம்
சேத்தில் நீ கால் வைத்தால் துள்ளும் கெண்டை மீனுக்கு உன்னைப் பாத்துக் கொண்டாட்டம்
மாத்துக் குறையாத மட்டில்லா என் மாமன் மவளே
மாத்தி உங்கப்பன் மாப்பிள்ளை பாத்தால் சொல்லிப்புட்டேன் கிட்நாப் கல்யாணம் !