குழந்தைக்கு பாலூட்ட
************************************ குழந்தைக்கு பாலூட்ட
**************
குழந்தைக்கு பாலூட்ட குளக்கரையில்
வந்துற்ற தாயே தார்மீகமே-- அம்
மழலையின் தமிழ் கேட்க மிழலையின்
ஈசற்கு பரிந்துரை செய்தவள்நீ
அழுதே புலம்பிட்ட வாசகன் தன்
தமிழுக்கு அச்சாரம் இட்டவளே --ஒரு
பழுதும் இல்லாத இவன்தமிழும்
கேட்டு விடு காசிவிசா லாட்சியே !