முத்துப் பந்தலொன்று
முத்துப் பந்தலொன்று
*********************************************
பழமுதிர்ச் சோலையானும் பழனத்தான்
சாமியுமாம் அழகனைப் பெற்றவளே
முழுமுதற்க் கடவுளென மூவுலகும்
போற்றுகின்ற ஆனைமுகன் தாயவளே
காழியான் மனங்குளிர முல்லைவனந்தன்னில்
முத்துப் பந்தலொன்று அமைத்தவளே
இழுவையாய் நிற்கின்ற இவன்பணிகள்
நிறைவேற அருளக்கூட்டு சாலாட்சியே !